TNPSC Thervupettagam

இணையக் கட்டுப்பாட்டு இயந்திர மனிதன்

June 10 , 2020 1633 days 685 0
  • மகாராஷ்டிராவின் தானேவைச் சேர்ந்த ஒரு பொறியியலாளர் இணையம் மூலம் கட்டுப்படுத்தும் ஒரு இயந்திர மனிதனை உருவாக்கியுள்ளார்.
  • டொம்பிவாலியில்  உள்ள பிஎன்டி சொல்யூஷன் என்ற துவக்க நிறுவனத்தின் நிறுவனர் பிரதிக் திரோட்கர் இதை வடிவமைத்து உருவாக்கியுள்ளார்.
  • இதற்கு கோரோ-போட் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இம்மாதிரியில் இதுவே முதல் வகையானது.
  • மும்பையின் கல்யாணில் உள்ள ஹோலி கிராஸ் மருத்துவமனையில் கோரோ-போட் முதன்முறையாக நிறுவப் பட்டுள்ளது.
  • இது செவிலியர்கள் அல்லது வார்டு பணியாளர்கள் நோயாளிகளுடன் மேற்கொள்ள வேண்டிய நேரடித் தொடர்பை நீக்குகிறது.
  • உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு செயலி மூலம் இதைக் கட்டுப்படுத்தும் ஒரு சிறப்பு வசதி இதில் உள்ளது.
  • மருத்துவத் துறையில், பொருட்களின் இணையம் (இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதல் இயந்திர மனிதன் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்