TNPSC Thervupettagam

இணையச் சுதந்திரம் 2019 – அறிக்கை

November 9 , 2019 1750 days 691 0
  • “சமூக ஊடகத்தின் நெருக்கடி நிலை” என்ற தலைப்பைக் கொண்ட 2019 ஆம் ஆண்டின் இணையச் சுதந்திரம் குறித்த ஒரு அறிக்கையானது சர்வதேச இணையக் கண்காணிப்புக் குழுவான “தி பிரீடம் ஹவுஸ்” என்ற அமைப்பால் வெளியிடப்பட்டது.
  • தொடர்ந்து நான்காவது ஆண்டாக இணையச் சுதந்திரத்தைத்  தவறாகப் பயன்படுத்தும் உலகின் மிக மோசமான நாடாக சீனா தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
  • தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இணைய சுதந்திர நிலையைப் பொறுத்தவரை பாகிஸ்தான் ஒரு  'சுதந்திரமற்ற நாடாக' அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையில் இந்தியாவிற்கு ஒட்டுமொத்தமாக 55 மதிப்பெண்கள் வழங்கப் பட்டுள்ளன. மேலும் இந்திய நாட்டில் இணையச் சுதந்திர நிலை ‘பகுதியளவு சுதந்திரமுடையதாக உள்ளது’ என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இணையச் சுதந்திரத்தில் உலகின் சிறந்த பாதுகாவலராக ஐஸ்லாந்து நாடு விளங்குகின்றது.
  • 2019 ஆம் ஆண்டில் அதன் இணையச் சுதந்திர மதிப்பெண்ணில் மிகப்பெரிய முன்னேற்றத்தை பதிவு செய்த நாடு எத்தியோப்பியா ஆகும்.
  • இது உலகெங்கிலும் உள்ள 65 நாடுகளில் நடத்தப்பட்ட இணையச் சுதந்திரம் குறித்த ஒரு விரிவான ஆய்வு ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டின் அறிக்கையானது அதன் தொடரில் 9வது அறிக்கையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்