TNPSC Thervupettagam

இணையத்தில் காணப்படும் சட்டவிரோத உள்ளடக்கங்கள்

January 6 , 2025 9 days 54 0
  • மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பல்வேறு மாநில அரசுகள், இணையத்தில் காணப் படும் சட்டவிரோதமான உள்ளடக்கங்கள் குறித்து தகவல் தெரிவிப்பதற்கு இணையவெளிக் குற்றத் தகவல் தெரிவிப்புத் தன்னார்வலர்களாக சுமார் 54,800 நபர்களைப் பணியமர்த்தியுள்ளன.
  • இணையவெளிக் குற்ற தகவல் தெரிவிப்பு தன்னார்வலர்கள் கட்டமைப்பு ஆனது, குடிமக்களுக்கு சட்டவிரோதமான உள்ளடக்கம் குறித்து புகாரளிப்பதற்கும், இணைய வெளித் தாக்குதல்களிலிருந்து சாதனங்களைப் பாதுகாத்தலுக்கான நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வினைப் பரப்புவதற்கும், சட்ட அமலாக்கத்திற்கு உதவும் இணைய வெளி நிபுணராகவும் அவர்களைப் பதிவுசெய்ய உதவுகிறது.
  • 22,942 பேர் சட்டவிரோதமான உள்ளடக்கம் குறித்து புகாரளிப்பதற்காக, 22,071 விழிப்பு உணர்வு ஊக்குவிப்பாளர்கள் மற்றும் 9,819 நிபுணர்கள் உட்பட 54,833 இணையவெளிக் குற்ற தகவல் தெரிவிப்பு தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.
  • மாநிலங்கள் மற்றும் வங்கிகளில் உள்ள முதன்மைக் காவல் நிலையங்களுடன் இணைக்கப் பட்ட இணையவெளிக் குற்றப் புகார் வலைதளங்கள் ஆனது சராசரியாக, ஒவ்வொரு நாளும் 67,000 அழைப்புகளைப் பெறுகிறது, மேலும், தினசரியாக மக்களை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் சுமார் 1,500-2,000 போலிக் கணக்குகளை இது வரை பாதுகாப்பு முகமைகள் அடையாளம் கண்டுள்ளன.
  • 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில், வாட்ஸ்அப் (43,797 புகார்கள்), டெலிகிராம் (22,680), இன்ஸ்டாகிராம் (19,800), பேஸ்புக் (20,766) மற்றும் யூடியூப் (3,882) போன்ற தளங்களில் குறைந்தது 1,10,925 இணையவெளிக் குற்றப் புகார்கள் அளிக்கப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்