TNPSC Thervupettagam

இணையத் தயார்நிலை அறிக்கை 2022

November 26 , 2022 728 days 408 0
  • 2022 ஆம் ஆண்டு இணையத் தயார்நிலை அறிக்கையானது, அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான போர்ட்லன்ஸ் இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.
  • 131 நாடுகளின் நான்கு வெவ்வேறு துறைகளில், அதாவது தொழில்நுட்பம், மக்கள், நிர்வாகம் மற்றும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இணைய அடிப்படையில் உள்ள தயார்நிலை சூழலை இந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
  • இந்த குறியீட்டில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிற நிலையில், சிங்கப்பூர் மற்றும் ஸ்வீடன் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
  • இந்தக் குறியீட்டில் மிகவும் வேகமாக முன்னேறி வரும் நாடு சிங்கப்பூர் ஆகும்.
  • சிங்கப்பூர் நாடானது, டென்மார்க் (6வது) மற்றும் பின்லாந்து (7வது) ஆகிய நாடுகளைப் பின்னுக்கு தள்ளி 7வது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
  • ஆசிய பசிபிக் நாடுகளில் சிறந்து விளங்கும் நாடாக சிங்கப்பூர் உள்ள நிலையில், அதைத் தொடர்ந்து தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகியவை உள்ளன.
  • 36 குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் பிரிவில் உக்ரைன் மற்றும் இந்தோனேசியாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்