TNPSC Thervupettagam

இணையப் பாதுகாப்பு தினம் - பிப்ரவரி 11

February 13 , 2020 1750 days 496 0
  • இணையப் பாதுகாப்பு தினமானது (Safer Internet Day - SID) நிகழ்நேரத் தொழில்நுட்பம் மற்றும் கைபேசிகள் ஆகியவற்றின் பாதுகாப்பான மற்றும் பொறுப்பான பயன்பாட்டை ஊக்குவிக்கின்றது.
  • இந்த ஆண்டின் கருத்துரு, ‘சிறந்த இணையத்திற்காக ஒன்றிணைதல்’ என்பதாகும்.
  • இந்தத் தினமானது 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இன்சேஃப் அமைப்பால் உருவாக்கப்பட்டது.
  • இந்த முன்முயற்சியை விரிவாக்குவதற்கு, இணையப் பாதுகாப்பு தினக் குழுக்கள் 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன.
  • இந்தியாவில், புது தில்லியைத் தளமாகக் கொண்ட ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனமான டிஐஎஸ்சி (இணையப் பாதுகாப்பு கொண்ட சமூகத்தை உருவாக்குதல்) அமைப்பானது SID குழுவில் ஒன்றாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்