2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குமுறைப்படுத்தும் சட்டத்தினை முழுவதுமாக ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
ஆனால் இந்த தடையானது வாய்ப்பு சார்ந்த விளையாட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்றும் தீர்ப்பளித்தது.
திறமை சார்ந்த விளையாட்டுகளாகக் கருதப்படும் ரம்மி மற்றும் போக்கர் விளையாட்டுகளும் தற்போது இணைய வழியிலும் விளையாடப் படுகின்றன.
இணையவழி விளையாட்டுகளை விளையாடுபவர்களுக்கு வயது வரம்புகளை விதிப்பது, விளையாட்டுகளை விளையாடுவதற்கான பண வரம்பு மற்றும் நேர வரம்புகளை நிர்ணயிப்பது தொடர்பான விதிமுறைகளை வகுக்கும் மாநில அரசின் உரிமைக்கு நீதிபதிகள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டு சட்டம் ஆனது, குறிப்பாக இணையவழி விளையாட்டுகள் தொடர்பான விதிகளை மட்டுமே வழங்குகிறது தவிர மற்ற நேரடி களம் சார்ந்த விளையாட்டுகளுக்கு அல்ல.