கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் பன்னாட்டு ஒழுங்கமைக்கப் பட்ட குற்றக் குழுக்கள் தங்கள் இலாபகரமான மோசடி நடவடிக்கைகளை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றன.
பல ஆண்டுகளாக, தென்கிழக்கு ஆசியாவில், மிக குறிப்பாக கம்போடியா, லாவோஸ் மற்றும் மியான்மர் நாட்டின் எல்லைப் பகுதிகளிலும், பிலிப்பைன்ஸிலும் மோசடி நடவடிக்கைகள் பெருகி வருகின்றன.
நூற்றுக்கணக்கானத் தொழில்துறை அளவிலான மோசடி மையங்கள் ஆண்டிற்கு 40 பில்லியன் டாலருக்கும் சற்றே குறைவான இலாபத்தை ஈட்டுவதாக UNODC அமைப்பு மதிப்பிடுகிறது.