TNPSC Thervupettagam

இணையவெளி உலக மாநாடு – இந்தியாவில் நடைபெறுகிறது

July 23 , 2017 2680 days 1121 0
  • உலகளாவிய இணையவெளி மாநாட்டை (Global Conference of Cyber Space -GCCS) 2017 இல் இந்தியா நடத்தவுள்ளது. உலகின் மிகப்பெரிய இணையவெளி மாநாடானது வரும் நவம்பர் 23 - 24 ஆம் தேதிகளில் நடக்கவுள்ளது. இதனை பிரதமர் தொடங்கி வைக்கிறார். 5வது உலகளாவிய இணையவெளி மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
  • பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (Organisation for Economic Co - operation and Development) உறுப்பு நாடுகளை விட்டு வெளியே முதன் முறையாக இந்த (GCCS) மாநாடு நடக்கவுள்ளது.
  • GCCS 2017 க்கான கருப்பொருள் "அனைவருக்கும் இணையவெளி: அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான, மேம்பட்ட, பாதுகாப்பான இணையவெளி" (Cyber4all: An inclusive Sustainable Development Safe and Secure Cyber space).
  • இணைய பாதுகாப்பு என்பது, ஜி.சி.சி.எஸ்., 2017 இல் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகளில் ஒன்றாக இருக்கும். குறிப்பாக மத்திய அரசானது தனியார் துறையில் குறிப்பிட்ட சில துறைசார்ந்த அவசர மையங்களை அமைப்பதன் மூலம், இணைய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும்.
  • உலக கருத்தரங்க மாநாட்டில் கலந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், கருத்தைப் பரிமாற்றுவதற்கு சிறந்த இடமாகவும், சர்வதேச சமூகத்தில் நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், இந்த மாநாடு உதவுகிறது.
எண் மாநாடு வருடம் நடைபெற்ற இடம்
1. முதல் மாநாடு 2011 இலண்டன், இங்கிலாந்து
2. இரண்டாம் மாநாடு 2012 புடாபெஸ்ட் , ஹங்கேரி
3. மூன்றாம் மாநாடு 2013 சியால், தென் கொரியா
4. நான்காம் மாநாடு 2015 ஹேக், நெதர்லாந்து
5. ஐந்தாம் மாநாடு (அறிவிக்கப்பட்டுள்ளது 2017 இந்தியா

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்