நைஜீரிய நாட்டின் இணையதளப் பயன்பாட்டாளர்கள் உலகிலேயே அதிகளவில் இணைய சங்கேதப் பண உரிமங்களை வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
கம்பாரிசன் ஃபர்ம் ஃபைன்டர் என்ற அமைப்பின் தரவுகளின் அடிப்படையில் இது கூறப் பட்டுள்ளது.
ஜப்பான் இப்பட்டியலில் மிகக்குறைவான இடத்தினைப் பெற்றுள்ளது.
இதில் இந்தியா 7வது இடத்தினைப் பெற்றுள்ளது.
இணைய சங்கேதப் பணம் வைத்துள்ள இந்தியர்களில் சுமார் 57% பேர் பிட்காயினில் முதலீடு செய்துள்ளனர் என்று 2021 ஆம் ஆண்டு இணைய சங்கேதப் பண ஏற்புக் குறியீடு கூறுகிறது.