இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (TRAI – Telecom Regulatory Authority of India) இணைய சமவாய்ப்பு நிலையின் அடிப்படை கோட்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளது.
தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் நெட்வோர்க் சேவைகளில் உள்ளடக்கத்தை (அதாவது இணையதங்கள்,செயலிகள்) அடிப்படையாக கொண்டு முன்னுரிமை அளித்தல், சில உள்ளடக்கங்களின் இணைய அணுகலை தடுத்தல், டேட்டா வேகத்தை குறைத்தல் போன்ற பாரபட்சமான அணுகுமுறைகளை மேற்கொள்வதை TRAI அனுமதி மறுக்கிறது.
எந்த ஒரு குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் இணைய தளங்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் பாரபட்ச வேறுபாடு பார்க்காமல் அனைத்து இணையதளங்களுக்கும் பயன்பாட்டாளர்களுக்கு அணுகுதலை தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் வழங்குவதே இணைய சமவாய்ப்பு (Net Neutrality) எனப்படும்.
அமெரிக்காவின் இணைய சமவாய்ப்புக்கான விரிவான கோட்பாடுகளின் பின்பற்றலை மையமாகக் கொண்ட 2015-ஆம் ஆண்டின் சட்டங்களை நீக்குதல் குறித்து அமெரிக்க பெடரல் தொலைதொடர்பு கமிஷன் (FCC – Fdederal Communication Commission) நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் வேளையில் TRAI இந்த முன் மொழிவை மேற்கொண்டுள்ளது.
முக்கியமான சேவைகளின் (specialized Service) விலக்களிப்போடு பாரபட்சமற்ற கட்டுப்பாடுகளின் கீழ் Internet of things (IoT) என்ற வசதியை கொண்டு வரவும் TRAI உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு சேவைகள் மற்றும் உள்ளடக்கங்களின் விநியோக பிணையம் (Contact delivery Network) போன்றவற்றிற்கு இணைய சமவாய்ப்பின் அனைத்து விதிகளிலிருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளது.