‘2023 ஆம் ஆண்டு இணைய சுதந்திரம் குறித்த அறிக்கை: செயற்கை நுண்ணறிவின் அடக்குமுறை சக்தி என்ற தலைப்பிலான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளாவிய இணைய சுதந்திரம் ஆனது தொடர்ந்து 13வது ஆண்டாக குறைந்துள்ளது.
29 நாடுகளில் இயங்கலையில் மனித உரிமைகளுக்கான சூழல் மோசமடைந்துள்ளது.
20 நாடுகளில் மட்டுமே இணைய சுதந்திரத்திற்கு உகந்த சூழல் பதிவாகியுள்ளது.
மேலும், 41 நாடுகளில், தனிநபர்கள் இயங்கலையில் தாங்கள் வெளியிடும் அறிக்கைகளால் தாக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர்.
ஐஸ்லாந்து இணைய சுதந்திரத்திற்கான சிறந்த சூழலைக் கொண்டுள்ளது.
சீனா, தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக, இணைய சுதந்திரத்திற்கான உலகின் மோசமான சூழல் கொண்ட நாடாக தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.
மியான்மர் இயங்கலை சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடு விதிக்கும் உலகின் இரண்டாவது அடக்குமுறை மிகுந்த நாடாகும்.
இந்தியாவில் மிதமான அளவிலான எண்ணிம சுதந்திரம் உள்ளது.
இந்திய அரசானது, கருத்துச் சுதந்திரத்தைப் பாதிக்கின்ற மற்றும் ஆளும் கட்சியை விமர்சிக்கும் விமர்சனங்களை குறைக்கின்ற வகையில் அதன் சட்ட கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தணிக்கையை இணைத்துள்ளது.
விரிவடைந்து வரும் தணிக்கை முறையால் இந்திய ஜனநாயகத்திற்குப் பாதகமான விளைவுகள் ஏற்படும் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது.