அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சன்சார் நிகம் லிமிடெட் (BSNL - Bharath Sanchar Nigam Limited) ஆனது இந்தியாவில் சீரான முதலாவது இணைய தொலைபேசி சேவைப் பிரிவை ஆகஸ்ட் 2018-ல் தொடங்கவுள்ளது.
எந்தவொரு சேவை நிறுவனமும் வழங்கும் இணைய சேவையைப் பயன்படுத்தி இப்பிரிவுகளின் மூலம் வாடிக்கையாளர் அழைப்பை ஏற்படுத்தவோ அல்லது அழைப்பை ஏற்கவோ முடியும்.
இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது VoIP வழிமுறைகளை அக்டோபர் 2017-ல் புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட VoIP விதிமுறைகளுக்கு மே 2018-ல் தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.