TNPSC Thervupettagam

இணைய பாதுகாப்பிற்கான உலகளாவிய மையம்

January 27 , 2018 2366 days 795 0
  • பெருகி வரும் இணைய வழியிலான தரவு திருட்டுகள், மீறல்கள் மற்றும் ஹேக்கர்களின் செயல்பாடுகள் போன்றவற்றிலிருந்து இணைய உலகினை பாதுகாப்பதற்காக  உலக பொருளாதார மன்றம் (World Economic Forum)  இணைய பாதுகாப்பிற்கான உலகளாவிய மையத்தை (Global Centre for Cybersecurity)  தொடங்கியுள்ளது.
  • உலக பொருளாதார மன்றத்தின் கீழ் தன்னாட்சியுடைய அமைப்பாக செயல்பட உள்ள இந்த மையமானது சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் அமைக்கப்பட உள்ளது.
  • இணைய பாதுகாப்பிற்கு உள்ள சவால்களுக்கு எதிராக உலக நாடுகளின் அரசுகள், வணிக நிறுவனங்கள், இணைய நிபுணர்கள், சட்ட செயலாக்க நிறுவனங்கள் போன்றவை கூட்டிணைவதற்கு முதல் நிலை   உலகளாவிய  தளத்தை  ஏற்படுத்தி தருவதே  இம்மையத்தின் நோக்கமாகும்.

உலக பொருளாதார மன்றம்

  • உலக பொருளாதார மன்றமானது சுவிட்சர்லாந்து நாட்டின்  ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஓர் இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
  • இம்மன்றமானது பொது மற்றும் தனியார் ஒத்துழைப்பிற்கான ஓர் சர்வதேச நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • உலக பொருளாதார மையமானது,  சுவிட்சர்லாந்து நாட்டின் கிழக்கு ஆல்ப்ஸ் மலைத் தொடரில் அமைந்துள்ள மலை வாழிட நகரமான டாவோஸில் நடத்தும்  புகழ்பெற்ற  வருடாந்திர 5 நாள் உலக பொருளாதார குளிர்கால மாநாட்டினால் உலகம் முழுவதும் அறியப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்