TNPSC Thervupettagam

இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கை

April 11 , 2018 2293 days 778 0
  • சமீபத்தில் வெளியிடப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தல் அறிக்கையின் படி, இணைய அச்சுறுத்தல்களான தீம் பொருள் (Malware), ஸ்பாம்கள் (Spams), ரான்சம்வேர்கள் (Ransom wares) ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா உலக அளவில் மூன்றாவது மிகுந்த பாதிக்கப்படக் கூடிய நாடாக உள்ளது.
  • இந்த அறிக்கை இணைய பாதுகாப்புத் தீர்வுகள் அளிக்கும் நிறுவனமான சைமன்டெக் - ஆல் வெளியிடப்பட்டது.
  • கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தியா இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறியுள்ளது.
  • 2017ல் இந்த வகையான தாக்குதல்களுக்கு பாதிக்கப்படக் கூடும் முதல் நாடாக அமெரிக்காவும் (26.61 சதவிகித உலகளாவிய அச்சுறுத்தல்களுடன்) அதனைத் தொடர்ந்து சீனாவும் உள்ளன.
 
  • இந்தியா, 2016ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட11 சதவிகித உலகளாவிய அச்சுறுத்தல்களைக் காட்டிலும் சற்று குறைவாக 5.09 சதவிகித அச்சுறுத்தல்களைக் கடந்த ஆண்டு (2017) பெற்றுள்ளது.
  • இந்தியா, போட் (Bots) மற்றும் ஸ்பாம் தாக்குதல்களில் இரண்டாவது இடத்திலும், பிணைய வகை தாக்குதல்களில் மூன்றாவது இடத்திலும், ரான்சம்வேர்   தாக்குதல்களில் நான்காவது இடத்திலும் உள்ளது.
  • இந்த உலகளாவிய அச்சுறுத்தல் தரவரிசை மால்வேர், ஸ்பாம், போட், பிஷிங்க் (Phishing), வலைதள தாக்குதல்கள் (Network Attacks), இணையதள தாக்குதல்கள் (Web Attacks), ரான்சம்வேர் மற்றும், கிரிப்டோமைனர் (Crypto miners) ஆகிய 8 அளவீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்