TNPSC Thervupettagam

இணைய வழி நீதிமன்றத் திட்டத்தின் மூன்றாம் கட்டம்

January 8 , 2025 4 days 63 0
  • மத்திய அமைச்சரவையானது, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இதில் 7,210 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் இணையவழி நீதிமன்றத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு (2023-2027) ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது இந்திய நீதித்துறையின் நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாட்டிற்காகத் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தினை (ICT) நன்கு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மை முயற்சியாகும்.
  • அதன் சில எண்ணிம நடவடிக்கைகள்,
    • நீதிமன்ற நடவடிக்கைகளை எண்ணிம மயமாக்குவதற்கு எண்ணிம மற்றும் காகிதமில்லா நீதிமன்றங்களை நிறுவுதல்.
    • மரபார்ந்தப் பதிவுகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் உட்பட நீதிமன்றப் பதிவுகளின் விரிவான எண்ணிமமயமாக்கல்.
    • நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு காணொளி வாயிலான வழக்காடல் வசதிகளை விரிவுபடுத்துதல்.
    • போக்குவரத்துசார் விதிமீறல்களை தீர்ப்பதற்கு வேண்டி இயங்கலை வழியிலான நீதிமன்றங்களின் நோக்கெல்லையினை விரிவுபடுத்துதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்