27வது இணைவு ஆற்றல் மாநாடு (Fusion Energy Conference - FEC 2018) குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்றது.
இது சர்வதேச அணு சக்தி முகமையால் (International Atomic Energy Agency - IAEA) ஒருங்கிணைக்கப்பட்டது. மேலும் இது அணுசக்தித் துறையாலும் காந்திநகரைச் சேர்ந்த பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தாலும் நடத்தப்பட்டது.
இது இயற்பியலின் முக்கிய விஷயங்களையும் தொழில்நுட்பக் கூறுகளையும் விவாதிப்பதற்கான ஒரு மன்றத்தை ஏற்படுத்த எண்ணுகின்றது. மேலும் அணுக்கரு இணைவினை ஒரு ஆற்றல் மூலமாக பயன்படுத்த நேரடித் தொடர்பிற்கான புதுமையான கருத்துக்களை ஏற்படுத்தவும் எண்ணுகின்றது.