TNPSC Thervupettagam

இண்டர்போல் அமைப்பின் புதிய தலைவர்

November 24 , 2018 2112 days 600 0
  • தென்கொரியாவின் கிம் ஜோங் யாங் இண்டர்போல் அமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • முதல்முறையாக துபாயில் நடைபெற்ற இண்டர்போலின் 87வது பொதுச் சபையில் அதன் உறுப்பினர்களால் இரண்டு ஆண்டுகால அளவிற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் பொதுச்சபையின் வாக்கெடுப்பில் மொத்த வாக்குகளில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று ரஷ்யாவின் அலெக்சான்டர் ப்ரோகோப்சக்கை தோற்கடித்தார்.
  • இவருக்கு முன் பதவி வகித்த மன்ங் ஹாங்வெய் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக சீனாவில் சிறையிலடைக்கப்பட்டதன் பொருட்டு அவருடைய நான்கு ஆண்டு பதவிக் காலத்தை முழுமையாக்கும் வகையில் கிம் ஜோங் யாங் 2020 வரை பதவி வகிப்பார்.
இண்டர்போல்
  • இண்டர்போல் என்பது ஒரு உலகளாவிய காவல்துறை கூட்டமைப்பு நிறுவனம் ஆகும்.
  • இது 1923ல் சர்வதேச குற்றவியல் காவல்துறை ஆணையம் (International Criminal Police Commission) என்ற பெயரில் நிறுவப்பட்டது.
  • இதன் தலைமையகம் பிரான்சின் லியோனில் அமைந்துள்ளது. இந்தியா உட்பட 194 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட இது உலக அளவில் ஒரு மிகப்பெரிய காவல்துறை அமைப்பாகும்.
  • இது சர்வதேச பிரதிநிதித்துவ அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்ததாக இரண்டாவது மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்