இதயம் காப்போம் முன்னெடுப்பு
January 31 , 2024
299 days
716
- தமிழ்நாட்டின் இதயம் காப்போம் முன்னெடுப்பு ஆனது, ஆறு மாதங்களை நிறைவு செய்து 5,000க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்குப் பயன் அளித்துள்ளது.
- இது மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட இதய சுகாதாரநலத் திட்டமாகும்.
- மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசரகாலப் பயன்பாட்டுத் தொகுப்பு மருந்துகள் கிடைக்கப் பெற்றன.
- 5,827 நபர்களில் 5,145 பேர், அறிகுறிகள் / சந்தேகத்திற்கிடமான மாரடைப்பு நோய்களுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு (PHCs) வருகை தந்துள்ளனர்.
- சுகாதார துணை மையங்களுக்குச் சிகிச்சைக்காகச் சென்ற 544 நோயாளிகளில் 386 பேர் அவசரகாலப் பயன்பாட்டுத் தொகுப்பு மருந்துகளைப் பெற்றுள்ளனர்.
- இத்திட்டம் ஆனது 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டது.
Post Views:
716