கடந்த 12 மாதங்களில் (பிப்ரவரி 2023-ஜனவரி 2024) உலக சராசரி வெப்பநிலையானது மிக அதிகபட்சமாக பதிவாகி இருந்தது.
இது 1850-1900 வரையிலான தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் பதிவான சராசரியை விட 1.52° செல்சியஸ் அதிகமாக உள்ளது.
2015 ஆம் ஆண்டில், தொழில்துறைக்கு முந்தைய காலத்தில் இருந்த நிலைகளுடன் (1850-1900) ஒப்பிடும் போது, இந்த சராசரி வெப்பநிலை உயர்வை 2° செல்சியஸ் என்ற வரம்பிற்கு குறைவாகவும், பெரும்பாலும் 1.5° செல்சியஸ் என்ற வரம்பிற்குள் வைத்து இருக்கவும் உலக நாடுகள் பாரீஸ் நகரில் ஒப்புக் கொண்டன.
இந்த இலக்கை அடைய, உலக நாடுகள் ஒன்றிணைந்து 2030 ஆம் ஆண்டிற்குள் புவியை வெப்பமாக்கும் பசுமை இல்ல வாயுக்களான கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்றவற்றின் உமிழ்வை 43% வரை குறைக்க வேண்டும்.