TNPSC Thervupettagam

இதுவரை காணப்படாத பேரண்டத்தின் படங்கள்

July 14 , 2022 869 days 447 0
  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த அடுத்தக் கட்டப் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
  • இதுவரை பார்த்திராதப் பேரண்டத்தின் காட்சிகளை இந்தப் படங்கள் காட்டுகின்றன.
  • அண்டங்களின் தொகுப்பானது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது போலவே இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய படங்களில் கரினா நெபுலா, WASP-96b, தென்புற வளைய நெபுலா மற்றும் ஸ்டீபனின் குயின்டெட் ஆகியவை அடங்கும்.
  • கரினா நெபுலா என்பது நமது சூரியனை விட அளவில் பெரிய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ள ஒரு நட்சத்திரக் குழுமம் ஆகும்.
  • இது 9,600 ஒளி ஆண்டுகளுக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ளது.
  • WASP-96b என்ற புறக்கோள் மற்றும் அதன் வளிமண்டலத்தின் படங்களும் வெளியிடப் படும்.
  • இந்தக் கோள் பூமியிலிருந்து 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
  • இது வியாழனின் நிறையில் பாதி நிறையைக் கொண்டது.
  • மேலும், அது தனது சூரியனை வெறும் 3.4 நாட்களில் சுற்றி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்