இதுவரை காணப்படாத பேரண்டத்தின் படங்கள்
July 14 , 2022
869 days
448
- ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி எடுத்த அடுத்தக் கட்டப் புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
- இதுவரை பார்த்திராதப் பேரண்டத்தின் காட்சிகளை இந்தப் படங்கள் காட்டுகின்றன.
- அண்டங்களின் தொகுப்பானது 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது போலவே இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
- இந்தப் புதிய படங்களில் கரினா நெபுலா, WASP-96b, தென்புற வளைய நெபுலா மற்றும் ஸ்டீபனின் குயின்டெட் ஆகியவை அடங்கும்.
- கரினா நெபுலா என்பது நமது சூரியனை விட அளவில் பெரிய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ள ஒரு நட்சத்திரக் குழுமம் ஆகும்.
- இது 9,600 ஒளி ஆண்டுகளுக்கும் அதிகமான தொலைவில் அமைந்துள்ளது.
- WASP-96b என்ற புறக்கோள் மற்றும் அதன் வளிமண்டலத்தின் படங்களும் வெளியிடப் படும்.
- இந்தக் கோள் பூமியிலிருந்து 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
- இது வியாழனின் நிறையில் பாதி நிறையைக் கொண்டது.
- மேலும், அது தனது சூரியனை வெறும் 3.4 நாட்களில் சுற்றி வருகிறது.
Post Views:
448