ஐரோப்பிய ஒன்றிய அறிவியலாளர்களின் கூற்றுப்படி, கடந்த 125,000 ஆண்டுகளில் 2023 ஆம் ஆண்டுதான் வெப்பமான ஆண்டாக கணிக்கப் பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதமானது, இந்த காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வெப்பமான அக்டோபர் மாதம் என புதிய சாதனை படைத்துள்ளது.
2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பதிவான முதல் அதிக வெப்ப நிலை என்ற சாதனையானது 0.4 டிகிரி செல்சியஸ் என்ற மிகவும் குறிப்பிடத்தக்க உயர்வினால் முறியடிக்கப் பட்டது.
அக்டோபர் மாதத்தில் பதிவான சராசரி உலகளாவிய மேற்பரப்பு காற்றின் வெப்ப நிலையானது, 1850-1900 என்ற தொழில்துறைக்கு முந்தைய கால கட்டத்தை விட 1.7 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.