நைஜீரியாவை பூர்வீகமாகக் கொண்ட இத்தாலியரான டோனி ஐவோபி இத்தாலி நாட்டின் முதல் கறுப்பின செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது இத்தாலியின் வலதுசாரி கட்சியின் குடியேற்ற விவகாரத்தின் தலைமை செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
இத்தாலியின் முக்கிய குடியேற்ற முனையமான (Immigration hub) வட இத்தாலியிலுள்ள பிரேஸ்சியா தொழில் நகரத்திலிருந்து இவர் செனட் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2013-ஆம் ஆண்டு முதல் வட ஆப்பிரிக்காவிலிருந்து இத்தாலியில் குடியேறிய 6,90,000-க்கும் அதிகமாக குடியேறியவர்களுக்காக #Stop invasion என்ற முழக்கப் பிரச்சாரத்தை டோனி ஐவோபி தொடங்கினார்.
இத்தாலியில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் எந்த ஒரு தனிக் கட்சிக்கும், கூட்டணிக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு பாராளுமன்றம் (Hung Parliament) ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.
மட்டேயோ சால்வானி தலைமையிலான வலதுசாரி லீக் கட்சி, வலதுசாரி கூட்டணியில் பெரும் வாக்குகள் பெற்று பெரிய கட்சியாக உருவாகியிருப்பினும், ஆட்சியமைப்பதற்கு தனிப்பெரும்பான்மையின்றி காணப்படுகின்றது.