TNPSC Thervupettagam

இத்தாலியில் தமிழ் மொழி கையெழுத்துப் பிரதிகள் கண்டுபிடிப்பு

August 7 , 2023 477 days 292 0
  • 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஞானமுயற்சி என்ற தலைப்பிலான சில கையெழுத்துப் பிரதிகள் வடக்கு இத்தாலியில் உள்ள ஆர்மீனிய மடாலயத்தில் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.
  • முனைவர் பட்டமுனைவு அறிஞரான தமிழ் பரதன் என்பவருக்கு இந்தக் கையெழுத்துப் பிரதிகளைப் படிப்பதற்கான அணுகலைப் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
  • இது இக்னேஷியஸ் என்பவர் எழுதிய Spiritual Exercise என்ற நூலின் முதல் தமிழ் மொழி பெயர்ப்பின் நகலாக இருக்கலாம்.
  • இந்த மொழிபெயர்ப்பு ஆனது தமிழில் ஞானப் பிரகாச சாமி என்று அழைக்கப்படும் மைக்கேல் பெர்டோல்டியினால் மொழிபெயர்க்கப் பட்ட நூலாக இருக்கலாம்.
  • இது 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சேர்ந்த (1720 ஆம் ஆண்டுகளைச் சேர்ந்ததாக இருக்கலாம்) ஒரு உரைநடை நூலாகும்.
  • இது 19 ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் உள்ள மிஷன் பிரஸ் எனும் அச்சகத்தினால் பலமுறை அச்சிடப் பட்டுள்ளது.
  • இந்த நூலகமானது கையெழுத்துப் பிரதிகளை ‘இந்திய பாப்பிரஸ் லாமுலிக் மொழி – XIII நூற்றாண்டு’ என வகைப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்