TNPSC Thervupettagam

இந்தியக் கடற்படையின் 'வினேத்ரா'

September 21 , 2024 66 days 101 0
  • விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் சாதவாகனா பயிற்சி மையத்தில் "வினேத்ரா" (பயிற்சியாளர்) என்ற பெயரிலான செயலிழந்த நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து தப்பிக்கும் நடவடிக்கைகளுக்கான ஓர் அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு பயிற்சி மையமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த மையமானது, செயலிழந்த கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து அதன் பணிக்குழுவினர் தப்பித்து வெளியேறும் செயல்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படைக்காக கட்டமைக்கப்பட்ட டீசல்-மின்சார சக்தியில் இயங்கும் தாக்குதல் ரக நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும்.
  • இந்த வகுப்பின் முதல் நீர்மூழ்கிக் கப்பல் ஆன ஐஎன்எஸ் கல்வாரி 2017 ஆம் ஆண்டில் படையில் இணைக்கப்பட்டது.
  • இந்த வகுப்பில் உள்ள மற்ற நீர்மூழ்கிக் கப்பல்களில் ஐஎன்எஸ் காந்தேரி, ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா, ஐஎன்எஸ் வகிர் மற்றும் ஐஎன்எஸ் வக்சீர் ஆகியவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்