இந்த நாளானது இந்தியக் கடற்படையின் பெரும்பங்கு மற்றும் முக்கிய சாதனைகளை அங்கீகரிக்கிறது.
1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போதான மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான கடற்படைத் தாக்குதலான ட்ரைடென்ட் என்ற நடவடிக்கையின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
இந்தியக் கடற்படையானது இந்த ஆண்டிற்கான இத் தினத்தின் கொண்டாட்டத்தின் போது ஒடிசாவின் பூரி நகரின் நீலக் கொடி கடற்கரையில் ஒரு பெரிய நடவடிக்கை செயல் விளக்கத்தினை நிகழ்த்தியது.
இந்திய கடற்படையானது, 1612 ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியால் நிறுவப் பட்டது.
இந்தியக் கடற்படையானது நாட்டின் கடல்சார் இறையாண்மை மற்றும் பல்வேறு கடல் நடவடிக்கைகளின் மிகவும் எண்ணற்றப் பயன்பாட்டிற்கு முதன்மைச் செயல்பாட்டு அமைப்பாகவும் பாதுகாப்பு உத்தரவாத அமைப்பாகவும் செயல்படுகிறது.