1971 ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு எதிராக ட்ரைடென்ட் நடவடிக்கை தொடங்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 04 ஆம் தேதியன்று இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
சிந்துதுர்க்கில் நடைபெற உள்ள நிகழச்சியில் MiG 29K மற்றும் கடற்படையின் இலகுரக போர் விமானங்கள் உள்ளிட்ட 40 விமானங்களுடன் 20 போர்க்கப்பல்கள் பங்கேற்க உள்ளன.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, “கடல்சார் களத்தில் செயல்பாட்டுத் திறன், தயார்நிலை மற்றும் பணியை நிறைவேற்றுதல்” என்பதாகும்.