இந்தியக் கடலோரக் காவல்படையானது 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.
பொருளாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கடல்வழி சரக்குப் பொருள் கடத்தல் நிகழ்வுகளை தடுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடற்கரை அண்மைப் பகுதி பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடலோரப் பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தை (EEZ) பாதுகாப்பது கடலோரக் காவல்படையின் பொறுப்புகளில் அடங்கும்.
1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதியன்று, இந்தியக் கடலோரக் காவல்படை (ICG) தினம் ஆனது பிப்ரவரி 01 ஆம் தேதியன்று கொண்டாடப்படும் என்று பாராளுமன்றம் அறிவித்தது.
ICG துறையானது உலகின் நான்காவது பெரிய கடலோரக் காவல்படையாக உள்ளது.
இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு கடற்சார் ஆயுதப் படை ஆகும்.