இந்தியக் கடலோரக் காவல்படையானது (Indian Coast Guard - ICG) தனது 44வது நிறுவன தினத்தை பிப்ரவரி 1 அன்று கொண்டாடியது.
1977 பிப்ரவரி 1 அன்று தொடங்கப்பட்ட ICG ஆனது கடலோரக் காவல் படைச் சட்டம் 1978 என்பதனை அமல்படுத்திய பின்பு மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் அது ஒரு முழு அளவிலான சுயாதீன ஆயுதப் படையாக மாறியது.
நாட்டின் பரந்த கடல்சார் மண்டலங்களைப் பாதுகாப்பதே இதன் முதன்மையான பணியாகும்.