TNPSC Thervupettagam

இந்தியக் கணக்கியல் தரங்கள்

March 24 , 2019 2075 days 748 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிளுக்கான இந்தியக் கணக்கியல் நிலைகளின் புதிய கணக்கியல் விதிகளின் செயல்படுத்துதலை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைத்துள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது மிகக் கடுமையான புதிய கணக்கியல் விதிகளை அறிமுகம் செய்வதை இரண்டாவது முறையாக ஒத்தி வைத்துள்ளது.
  • இந்தப் புதிய கணக்கியல் நிலைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தால் ஜுன் 30 ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய அரசினால் நிர்வகிக்கப்படும் வங்கிகள் தங்களது தேவைகளை 1.1 டிரில்லியன் ரூபாய் அளவிற்கு அதிகரிக்க வேண்டும்.
  • இது ஏற்கனவே வாராக் கடன் சுமையால் அல்லல்படும் வங்கிகளுக்கு மிகப் பெரிய சுமையாக இருக்கும்.
  • புதிய கணக்கியல் நிலைகளானது கடன் வாங்கியவர் மீதமுள்ள தொகையை செலுத்தத் தொடங்கும் வரை காத்திருக்காமல் திவாலாக மாறும் என்று அந்த வங்கி கருதியவுடன் உடனடியாக நடவடிக்கைகளை அந்த வங்கி மேற்கொள்ள வேண்டும்.
  • நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகள் இந்தப் புதிய விதிகளை அமல்படுத்த வேண்டியதில்லை. இந்த வங்கிகள் தற்பொழுதுள்ள கணக்கியல் நடைமுறைகளையே தொடரலாம்.
இந்தியக் கணக்கியல் தர நிலைகள்
  • இந்தியக் கணக்கியல் தர நிலைகள் என்பது சர்வதேச நிதி அறிக்கை தர நிலைகளுடன் ஒன்றிப்போகும் கணக்கியல் விதிகளின் ஒரு புதிய தொகுப்பாகும்.
  • வங்கிகள் திவாலாவதைத் தடுப்பதற்காக 2008 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து IFRS 9 என்ற கணக்கியல் தரநிலை உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்