இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிளுக்கான இந்தியக் கணக்கியல் நிலைகளின் புதிய கணக்கியல் விதிகளின் செயல்படுத்துதலை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைத்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது மிகக் கடுமையான புதிய கணக்கியல் விதிகளை அறிமுகம் செய்வதை இரண்டாவது முறையாக ஒத்தி வைத்துள்ளது.
இந்தப் புதிய கணக்கியல் நிலைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்தால் ஜுன் 30 ஆம் தேதியுடன் முடிவடையவிருக்கும் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய அரசினால் நிர்வகிக்கப்படும் வங்கிகள் தங்களது தேவைகளை 1.1 டிரில்லியன் ரூபாய் அளவிற்கு அதிகரிக்க வேண்டும்.
இது ஏற்கனவே வாராக் கடன் சுமையால் அல்லல்படும் வங்கிகளுக்கு மிகப் பெரிய சுமையாக இருக்கும்.
புதிய கணக்கியல் நிலைகளானது கடன் வாங்கியவர் மீதமுள்ள தொகையை செலுத்தத் தொடங்கும் வரை காத்திருக்காமல் திவாலாக மாறும் என்று அந்த வங்கி கருதியவுடன் உடனடியாக நடவடிக்கைகளை அந்த வங்கி மேற்கொள்ள வேண்டும்.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகள் இந்தப் புதிய விதிகளை அமல்படுத்த வேண்டியதில்லை. இந்த வங்கிகள் தற்பொழுதுள்ள கணக்கியல் நடைமுறைகளையே தொடரலாம்.
இந்தியக் கணக்கியல் தர நிலைகள்
இந்தியக் கணக்கியல் தர நிலைகள் என்பது சர்வதேச நிதி அறிக்கை தர நிலைகளுடன் ஒன்றிப்போகும் கணக்கியல் விதிகளின் ஒரு புதிய தொகுப்பாகும்.
வங்கிகள் திவாலாவதைத் தடுப்பதற்காக 2008 ஆம் ஆண்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து IFRS 9 என்ற கணக்கியல் தரநிலை உருவாக்கப்பட்டது.