TNPSC Thervupettagam

இந்தியக் காண்டாமிருக தொலைநோக்குத் திட்டம் 2020

April 21 , 2021 1189 days 893 0
  • ஒற்றைக் கொம்பு கொண்ட காண்டாமிருகங்கள் அசாமின் மனாஸ் தேசியப் பூங்காவிற்கு இடமாற்றம் செய்யப் பட்டதையடுத்து இந்த திட்டம் நிறைவு பெறவு உளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், குறைந்தது 22 காண்டாமிருகங்கள் பாபிடோரா வனவிலங்குச் சரணாலயம் (12) மற்றும் காசிரங்கா தேசியப் பூங்கா (10) ஆகிய பகுதிகளிலிருந்து 2008 ஆம் ஆண்டு முதல் அசாமுக்குள் உள்ள மனாஸ் தேசியப் பூங்காவிற்கு மாற்றப் பட்டுள்ளன.
  • 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டமானது அசாம் வனத்துறை, இயற்கைக்கான உலகளாவிய நிதிக்கான இந்தியப் பிரிவு, போடோலாந்து பிராந்திய மன்றம் மற்றும் சர்வதேச காண்டாமிருக அறக்கட்டளை ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாகும்.
  • இது 2020 ஆம் ஆண்டில் அசாமில் ஏழு பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கையை 3,000 என்ற அளவிற்கு உயர்த்தும் ஒரு இலக்கைக் கொண்ட வகையில் காண்டாமிருகங்களுக்கான பணிப்பிரிவு என்ற அமைப்பால் 2005 ஆம் ஆண்டில் வடிவமைக்கப் பட்டது.
  • பாபிடோரா வனவிலங்குக் காப்பகம், ராஜீவ் காந்தி ஒராங் தேசியப் பூங்கா, காசிரங்கா தேசியப் பூங்கா, மனாஸ் தேசியப் பூங்கா, லாகோவா வனவிலங்குச் சரணாலயம், புராச்சபோரி வனவிலங்குச் சரணாலயம் மற்றும் திப்ரு சைகோவா வனவிலங்குச் சரணாலயம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட ஏழு பகுதிகளாகும்.
  • இப்போது அசாமில் நான்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே இந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன, அவை பாபிடோரா வனவிலங்குக் காப்பகம், ராஜீவ் காந்தி ஒராங் தேசியப் பூங்கா, காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மனாஸ் தேசியப் பூங்கா ஆகும்.
  • ஒற்றை கொம்பு காண்டாமிருகம் இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.
  • இந்தியக் காண்டாமிருகம் என்றும் அழைக்கப்படும் இது காண்டாமிருக இனங்களில் மிகப்பெரியதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்