TNPSC Thervupettagam

இந்தியக் குடியரசுத் தலைவரின் வர்ண விருது

September 29 , 2019 1765 days 656 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மதிப்பு மிக்க குடியரசுத் தலைவரின் வர்ண விருதுகளை இராணுவ வான் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கினார்.
  • இந்தியக் குடியரசுத் தலைவர் வர்ண விருது என்பது ஒரு விழாவின் போது இந்தியக் குடியரசுத் தலைவரால் ஒரு படைப் பிரிவிற்கு வழங்கப்படும் படைப்பிரிவுக் கொடிகளாகும்.
  • அமைதி மற்றும் போரின் போது, தேசத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பான சேவைகளை அங்கீகரிப்பதற்காக ஆயுதப் படைப் பிரிவிற்கு வழங்கப்படும் மிகப்பெரிய கௌரவ விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.
இதுபற்றி
  • இராணுவ வான் பாதுகாப்பு படைகள் ஆனது இராணுவத்தின் இளம் படைப் பிரிவுகளில் ஒன்றாகும்.
  • இது 1989 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • பீரங்கிப் படைப் பிரிவானது 1989 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்டது. அதன் பின்னர் இராணுவ விமானப் பாதுகாப்புக் கல்லூரி (Army Air Defence College  - AADC) நிறுவப்பட்டது.
  • AADC என்பது வான் பாதுகாப்புப் படையில் உள்ள பணியாளர்களுக்கான ஒரு பயிற்சிப் பள்ளியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்