தனது புலிகள் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, இந்திய வனவிலங்கு நிறுவனமானது (WII - Wildlife Institute of India) இந்த மாத இறுதியில் “காணப்பட்ட சிறுத்தைகள்” என்பது குறித்த ஒரு பிரத்தியேக அறிக்கையை வெளியிட உள்ளது.
இந்தியச் சிறுத்தைகள் குறித்த கடைசி முறைசார் கணக்கெடுப்பானது 2014 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது. இது இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கையானது 12,000 மற்றும் 14,000 ஆகியவற்றுக்கு இடையில் இருக்கும் என்று கணித்துள்ளது.
மேலும் இது 8000 சிறுத்தைகள் புலிகளின் வாழிடத்திற்குள் காணப்படுவதாகவும் கணித்துள்ளது.
சிறுத்தைகளின் நிலை
புலிகளுடன் சேர்த்து வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம், 1972ன் பட்டியல் I-ன் கீழ் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
CITES-ன் (The Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) பட்டியல் I-ல் வகைப்படுத்தப் பட்டுள்ளது.
IUCN-ன் (International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியலில் “பாதிக்கப்படக் கூடிய இனமாக” பட்டியலிடப் பட்டுள்ளது.