இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு நுழைவு இசைவு இல்லாத பயண வசதி
December 20 , 2024 7 days 63 0
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நுழைவு இசைவுச் சீட்டு இன்றி ரஷ்யாவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடியும்.
நுழைவு இசைவுச் சீட்டு விதிகளை எளிதாக்குவதற்கான இருதரப்பு ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளன என்ற நிலைமையில் இந்த ஒரு ஒப்பந்தமானது நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத வகை சுற்றுலாப் பரிமாற்றங்களை அறிமுகப் படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டது.
2023 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில், பொதுவாக நான்கு நாட்களுக்குள் எனச் செயல் படுத்தப் படுகின்ற ரஷ்யாவிற்கான இணைய வழி நுழைவு இசைவுச் சீட்டுகளைப் பெறுவதற்கு இந்தியப் பயணிகள் தகுதி பெற்றனர்.
2023 ஆம் ஆண்டில், இது சுமார் 9,500 இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்பட்டதுடன் இணைய வழி நுழைவு இசைவுச் சீட்டுகளுக்கான அனுமதியினைப் பெறும் முதல் ஐந்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்தது என்பதோடு இந்தியா மொத்தத்தில் 6% பங்கினைக் கொண்டிருந்தது.
2023 ஆம் ஆண்டில், சுமார் 60,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டனர் என்ற நிலையில் இது 2022 ஆம் ஆண்டில் பதிவானதை விட சுமார் 26% அதிகமாகும்.
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில், முதல் காலாண்டில் மட்டும் கிட்டத்தட்ட சுமார் 1,700 இணைய வழி நுழைவு இசைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டு, வணிக சுற்றுலாவுக்கான CIS சாராத நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
தற்போது, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இந்த நுழைவு இசைவுச் சீட்டு இல்லாத சுற்றுலாப் பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் தனது நாட்டினுள் நுழைய ரஷ்யா அனுமதிக்கிறது.
இந்தியக் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்கள் தற்போது சுமார் 62 நாடுகளுக்கு நுழைவு இசைவுச் சீட்டு இல்லாமல் பயணம் செய்யும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.