இந்தியத் தரமிடல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, 2020 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை 3.2 சதவிதம் அளவிற்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற பொதுத் தேர்தலுக்கு முன்பாக அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் இதர நிதி ஆதாரத் திட்டங்கள் போன்ற திட்டங்களால் இந்த நிதிப் பற்றாக்குறை ஏற்படும்.
2020 ஆம் நிதி ஆண்டில் கடன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதைக் கண்டிடும் வகையில் மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகும் .
ஈட்டுகின்ற வருவாயைக் காட்டிலும் செலவிடப்படும் செலவினங்களின் வளர்ச்சி அதிகரிப்பதன் காரணமாக 2020 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் கணக்கில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.5 சதவிகிதம் அளவிற்குப் பற்றாக்குறை ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
2019 ஆம் நிதி ஆண்டில் இந்திய தரமிடல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட அரையாண்டு கணக்கெடுப்பின்படி நிதிப்பற்றாக்குறை 2.8 சதவிகிதமாக இருக்கும் என்று கூறப்பட்டது.