TNPSC Thervupettagam

இந்தியத் திறன்கள் அறிக்கை 2024

December 31 , 2023 334 days 290 0
  • 2024 ஆம் ஆண்டு இந்தியத் திறன்கள் அறிக்கையில் அதிக வேலை வாய்ப்பு வளங்களைக் கொண்டிருக்கும் பிரிவில் ஆந்திரப் பிரதேச மாநிலமானது மூன்றாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா இதில் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களைப் பிடித்துள்ளன.
  • இந்தியாவிலுள்ள ஒட்டுமொத்த இளைஞர்களின் வேலைவாய்ப்பின் முன்னேற்ற நிலையானது, 51.25%  என்ற அளவினை எட்டியுள்ளது.
  • ஹரியானா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்கள், அதிக வேலை வாய்ப்பு பெறக் கூடிய இளைஞர்களின் செறிவைக் காட்டுகின்றன.
  • ஹரியானாவில் அதிக வேலை வாய்ப்பு பெறக் கூடிய இளைஞர்கள் குவிந்துள்ளனர்.
  • 80.82% அளவு வேலைவாய்ப்பு பெறக்கூடிய இளைஞர்களுடன் புனே முதலிடத்தைப் பிடித்ததோடு, அதைத் தொடர்ந்து பெங்களூரும், திருவனந்தபுரமும் உள்ளன.
  • 18-21 வயதிற்குட்பட்டவர்களில் 85.45% பேர் அளவு வேலை வேலைவாய்ப்பு பெறக் கூடிய திறன்களைப் பெற்றவர்களை தெலுங்கானா மாநிலம் கொண்டுள்ளது.
  • 26-29 வயதிற்குட்பட்ட நபர்களில் அதிக வேலைவாய்ப்பு பெறக் கூடிய அளவு மனித வளங்களை குஜராத் மாநிலம் கொண்டுள்ளதோடு, இந்த வயதினரில் 78.24% பேர் வேலை வாய்ப்பு பெரும் திறனுடன்  உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்