பெயின் & கம்பெனி, அதன் வருடாந்திர 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியத் துணிகர முதலீடுகள் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 38.5 பில்லியன் டாலராக இருந்த துணிகர மூல தன முதலீடுகள் 2022 ஆம் ஆண்டில், 33% குறைந்து 25.7 பில்லியன் டாலராக குறைந்து உள்ளது.
மென்பொருள் சேவை மற்றும் நிதிசார் தொழில்நுட்பச் சேவை ஆகியன பிரிவுகள் முதலீட்டாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க ஒரு முக்கியத்துவம் வாய்ந்தப் பிரிவுகளாக தொடர்ந்துத் திகழ்கின்றன.
2022 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியப் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்ட ஒட்டு மொத்த நிதியில் இரு துறைகளிலும் சேர்ந்து தோராயமாக 35% மற்றும் 25% பங்கினைக் கொண்டுள்ளன.
2021-2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த முதலீடுகள் 1.4 மடங்கு அதிகரித்தன.
2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடப் படும் போது 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இவை 70% சரிவைக் கண்டன.