இந்தியத் தேசிய ஆவணக் காப்பகத்தின் 135வது ஸ்தாபன தினம்
March 16 , 2025 18 days 75 0
இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் (NAI) ஆனது, மார்ச் 11 ஆம் தேதியன்று அதன் 135வது ஸ்தாபன தினத்தினை "Indian Heritage through Architecture" என்ற கருத்துருவிலான ஒரு கண்காட்சியுடன் கொண்டாடியது.
கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இணைக்கப்பட்ட அலுவலகமான NAI ஆனது, முதலில் 1891 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதியன்று கொல்கத்தாவில் (கல்கத்தா) பிரிட்டிஷ் ஆவணக் காப்பு (பதிவுத் துறையாக) துறையாக நிறுவப்பட்டது.
ஆவணங்களை கொல்கத்தாவிலிருந்து புது டெல்லிக்கு மாற்றும் செயல்பாடு 1937 ஆம் ஆண்டில் முழுமையாக முடிவடைந்தது.
இந்தியத் தேசிய ஆவணக் காப்பகம் ஆனது, பொதுப் பதிவுச் சட்டம், 1993 மற்றும் பொதுப் பதிவு விதிகள், 1997 ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான ஒரு தலைமை நிறுவனமாகவும் செயல்படுகிறது.
இந்த நிகழ்வின் போது, இந்தியாவின் பரந்த கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தினை ஆய்வு செய்தல், ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக 'ஞான பாரதம் திட்டம்' தொடங்கப்பட்டது.