இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது ஜனவரி 25 ஆம் தேதியன்று, தேசத்திற்கான தனது 75 ஆண்டு காலச் சேவையினைக் கொண்டாடியது.
இந்தியா குடியரசாக மாறுவதற்கு ஒரு நாள் முன்னதாக, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதியன்று இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையம் ஆனது ஒரு நிரந்தர அரசியலமைப்பு அமைப்பாகும்.
முதலில் இந்த ஆணையத்தில் ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் மட்டுமே இருந்தார் என்ற நிலையில் தற்போது இது ஒரு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இரண்டு தேர்தல் ஆணையர்களைக் கொண்டுள்ளது.
1989 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதியன்று முதன்முறையாக இரண்டு கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர் ஆனால் அவர்கள் 1990 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி வரை என்ற மிகக் குறுகிய பதவிக் காலத்தைக் கொண்டிருந்தனர்.
பின்னர், 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று இரண்டு கூடுதல் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர்.