TNPSC Thervupettagam

இந்தியன் ரயில்வேயின் முதல் கட்ட சூரியசக்தி ஆலைகள்

October 28 , 2017 2632 days 900 0
  • இந்தியன் ரயில்வேயின் முதல் கட்ட சூரிய ஆலைகளை ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் துவங்கிவைத்தார். இது 5 மெகாவாட் உச்சநிலைத் திறனுடையது.
  • இத்திட்டம், மத்திய அரசின் “தேசிய சூரிய சக்தி இயக்கத்தின்” ஒரு பகுதியாக நிறுவப்பட்டுள்ளது. இதன்படி தனது வலையமைப்பு முழுவதிலும் 1000 மெகாவாட் திறனுடைய சூரிய சக்தி ஆலைகளை நிறுவ இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.
  • “பசுமை முன் முயற்சிகளும், இரயில்வே மின்மயமாக்கலும்” என்பதன் மீதான சர்வதேச கருத்தரங்கின் துவக்க நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
  • இந்த மாநாடு, தேசியப் போக்குவரத்தான ரயில்வேயில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்துவதற்கான புதிய வழிகளைக் கண்டறிவதன் மீதானதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்