TNPSC Thervupettagam

இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி C. சுப்பிரமணியம்

February 15 , 2025 7 days 88 0
  • செங்கல்பட்டின் செய்யூர் தாலுக்காவில் உள்ள இல்லேடு கிராமத்தில் உள்ள தேசிய வேளாண் அறக்கட்டளையின் (NAF) கிராமப்புற மேம்பாட்டு மைய வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் C. சுப்பிரமணியம் அவர்களின் சிலை திறக்கப்பட்டு உள்ளது.
  • NAF அறக்கட்டளையானது C. சுப்பிரமணியம் அவர்களால் நிறுவப்பட்டது.
  • அவர் மத்திய வேளாண் அமைச்சராக பதவியேற்ற போது, 1965-66 ஆம் ஆண்டில் பல வட மாநிலங்களில் பெரும் வறட்சி ஏற்பட்டது.
  • அந்த நேரத்தில் தான் நார்மன் போர்லாக் அவர்கள், மெக்சிகோ நாட்டுக் கலப்பின ரக கோதுமையை உருவாக்கினார் என்பதோடு M.S.சுவாமிநாதன் மணிலாவிலிருந்து IR8 மற்றும் சோனாலிகா ரக விதைகளை வாங்கி அதில் அறிமுகப்படுத்தினார்.
  • C. சுப்பிரமணியம் அவர்கள் துணிந்து செயல்பட்டு, கலப்பின அரிசி மற்றும் கோதுமை விதைகளை வாங்கி நாடு முழுவதும் விநியோகித்தார்.
  • இதனால், 1971 ஆம் ஆண்டில், இந்தியா உணவு தானியங்களில் தன்னிறைவு பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்