யுனெஸ்கோவுடன் இணைந்து சகாபீடியா, 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பாரம்பரிய பயணத் திருவிழாவின் இரண்டாவது பதிப்பை நடத்தியது.
மேலும் இது தேசிய கனிமப்பொருள் வளர்ச்சி நிறுவனத்தால் ஆதரிக்கப்பட்டது.
இத்திருவிழாவானது வரலாற்றுடன் தொடர்புடைய மறைந்துள்ள இரத்தினங்களைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
இந்தப் பாரம்பரிய பயணத் திருவிழாவானது விருந்தாவனின் உள்வெட்டுத் தகட்டினால் காகிதத்தை வெட்டி உருவாக்கும் கலையான “சன்ஜ்ஹியை” மும்பையின் பந்த்ராவில் அறிமுகப்படுத்த முடிவெடுத்துள்ளது.
இந்தத் திருவிழாவின் முதலாவது பதிப்பானது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பிரிவில் 2018 ஆம் ஆண்டின் ஆசிய பசிபிக் சுற்றுலாச் சங்கத்தின் (PATA - Pacific Asia Travel Association) தங்க விருதினை வென்றுள்ளது.