TNPSC Thervupettagam

இந்தியப் பெண்களிடையே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள்

February 8 , 2024 295 days 260 0
  • இந்தியாவில் பதிவான புதிய பாதிப்புகளில் 32 சதவிகிதம் ஆனது, மார்பகம், வாய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள் ஆகும்.
  • இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் 14.13 லட்சத்துக்கும் அதிகமான புதிய புற்றுநோய் பாதிப்புகள் மற்றும் 9.16 லட்சம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
  • ஆண்களில் பதிவாகியுள்ள 6,91,178 பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது, பெண்களில் பதிவாகியுள்ள 7,22,138 புற்றுநோய் பாதிப்புகள் சற்று அதிகமாக உள்ளது.
  • மார்பகம், கருப்பை வாய், கருப்பை, வாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் ஆகியவை இந்தியப் பெண்கள் மத்தியில் அதிகம் பரவும் ஐந்து புற்றுநோய் பாதிப்புகள் ஆக கண்டறியப் பட்டுள்ளது.
  • வாய்க்குழி, நுரையீரல், உணவுக்குழாய், பெருங்குடல் மற்றும் வயிறு ஆகியவை இந்திய ஆண்கள் மத்தியில் அதிகம் பரவும் ஐந்து புற்றுநோய்கள் ஆகும்.
  • இந்தியாவில் 1% பெண்களுக்கு மட்டுமே கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப் படுகிறது.
  • பல தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாநிலங்கள் பெண்கள் மத்தியில் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்வதற்கு முனைப்பு காட்டியுள்ளன.
  • உதாரணமாக, தமிழ்நாட்டில் 7% பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்காகவும், 3.8% பேர் மார்பகப் புற்றுநோய்க்காகவும் பரிசோதனை மேற்கொண்டதாகவும் கூறி உள்ளனர்.
  • பல்வேறு மாநிலங்களில் இந்த இரண்டு வகைகளில் பதிவான பரிசோதனைப் பதிவில் இது மிக அதிகம் ஆகும்.
  • கேரளா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் இந்த இரண்டு வகைகளின் கீழ் 1% அளவை மட்டுமே கடந்துள்ளன.
  • ஆந்திரப் பிரதேசத்தில், 5% பெண்கள் வாய்வழிப் புற்றுநோய்க்காகப் பரிசோதனை மேற்கொண்டதாகவும் கூறியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் இந்த வகைப் புற்றுநோயில் பதிவான பரிசோதனைப் பதிவில் இது மிக அதிகம் ஆகும்.
  • அதே சமயம், இந்தியாவில் மிகக் குறைவாக மேற்கு வங்காளத்தில் 0.1% பெண்கள் மட்டுமே ஏதேனும் ஒரு வகையான புற்றுநோய்க்காக பரிசோதனை மேற்கொண்டதாக கூறியுள்ளனர்.
  • குஜராத் மாநிலமும் 0.2% அளவுடன் மோசமான செயல்திறனைக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் ஒட்டு மொத்தமாக, 2019-21 ஆம் ஆண்டு நிலவரப்படி, கர்ப்பப்பை வாய், மார்பகம் மற்றும் வாய்க்குழி புற்றுநோய்க்காக பரிசோதனை மேற்கொண்ட பெண்களின் பங்குகள் முறையே 1.2%, 0.6% மற்றும் 0.7% ஆக உள்ளது.
  • இதற்கு மாறாக, சுவீடன், அயர்லாந்து, அமேரிக்கா மற்றும் ஐக்கியப் பேரரசு போன்ற முன்னேறிய நாடுகளில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்காகப் பரிசோதனை மேற் கொண்ட பெண்களின் பங்கு 70% க்கும் அதிகமாக இருந்தது.
  • இதில் 93% உடன் ரஷ்யா முன்னிலை வகிக்கிற நிலையில், பிரேசில் 58% பங்கினையும், தென்னாப்பிரிக்கா 52% பங்கினையும் கொண்டுள்ளன.
  • இந்தியா, எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இந்தப் பரிசோதனை அளவு 5 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்