இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் தலைமை
October 14 , 2023 409 days 251 0
கொழும்பு நகரில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் (IORA) அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியா, வங்காளதேசம், மொரிஷியஸ், ஈரான், மலேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
கொழும்பு நகரில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் 16 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் உச்ச நிலை முடிவெடுக்கும் அமைப்பான இந்த சபைக்குத் தலைமை தாங்கினார்.
தற்போதைய தலைமையான வங்காளதேசத்தின் வெளியுறவு அமைச்சருக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை அந்தப் பொறுப்பினை ஏற்றுள்ளது.
இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதிகளில் உள்ள நாடுகளின் அரசுகளுக்கு இடையேயான அமைப்பாக 1997 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கம் நிறுவப் பட்டது.
இது ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
இந்தச் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையானது, 23 உறுப்பினர் நாடுகள் மற்றும் 11 பேச்சுவார்த்தை பங்குதாரர் நாடுகள் ஆக விரிவடைந்துள்ளது.