TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் தலைமை

October 14 , 2023 280 days 192 0
  • கொழும்பு நகரில் நடைபெற்ற இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் (IORA) அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியா, வங்காளதேசம், மொரிஷியஸ், ஈரான், மலேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பல வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்றனர்.
  • கொழும்பு நகரில் நடைபெற்ற அமைச்சர்கள் கூட்டத்தில் 16 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
  • இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கத்தின் உச்ச நிலை முடிவெடுக்கும் அமைப்பான இந்த சபைக்குத் தலைமை தாங்கினார்.
  • தற்போதைய தலைமையான வங்காளதேசத்தின் வெளியுறவு அமைச்சருக்குப் பிறகு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கை அந்தப் பொறுப்பினை ஏற்றுள்ளது.
  • இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதிகளில் உள்ள நாடுகளின் அரசுகளுக்கு இடையேயான அமைப்பாக 1997 ஆம் ஆண்டில் இந்தியப் பெருங்கடலின் விளிம்புப் பகுதி நாடுகள் சங்கம் நிறுவப் பட்டது.
  • இது ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையானது, 23 உறுப்பினர் நாடுகள் மற்றும் 11 பேச்சுவார்த்தை பங்குதாரர் நாடுகள் ஆக விரிவடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்