TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடலில் ‘புவிஈர்ப்புத் துளை’

April 8 , 2024 229 days 297 0
  • இந்தியப் பெருங்கடலில் உள்ள 'புவிஈர்ப்புத் துளை' என்று குறிப்பிடப்படும் குழிவு ஆனது சுமார் 1.2 மில்லியன் சதுர மைல்கள் வரை பரவியுள்ளது.
  • இந்தியாவின் தெற்கு முனையில் இருந்து இந்த வட்ட வடிவக் குழிவு நிலை உருவாகி உள்ளது.
  • இது அதிகாரப்பூர்வமாக இந்தியப் பெருங்கடல் புவிக்கோளக் குழிவு என்று அழைக்கப் படுகிறது மற்றும் இது உலகின் மிகப்பெரிய புவிஈர்ப்புக் குழிவு (ஒழுங்கின்மை நிலை) ஆகும்.
  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தைச் (IISc) சேர்ந்த அறிவியலாளர்கள் இந்தியப் பெருங்கடலில் உள்ள "புவிஈர்ப்புத் துளைக்கான" மிகவும் நம்பகமான விளக்கத்தை அளித்துள்ளனர்.
  • பூமியின் அடி ஆழத்திலிருந்து வெளிவரும் இந்தப் பாறைக் குழம்பின் குவியல்கள், எரிமலைகளின் உருவாக்கத்திற்கு காரணமானவையாகும்.
  • பூமியின் ஈர்ப்பு விசை பலவீனமாக இருக்கும் இடத்தில் புவிஈர்ப்பு துளைஏற்படுகிறது என்ற நிலையில் இதன் விளைவாக கடல் மட்டத்தில் 328 அடிக்கு மேற்பட்ட அளவிலான ஒரு குழிவு ஏற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்