TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடல் பல்லுயிர்ப் பெருக்க பெருங்கடல் தகவல் அமைப்பு

September 13 , 2024 19 days 52 0
  • கடல் வாழ் வளங்கள் மற்றும் சூழலியல் மையம் (CMLRE) ஆனது, கொச்சியில் இந்தியப் பெருங்கடல் பல்லுயிர்ப் பெருக்க தகவல் வழங்கீட்டு அமைப்பு (IndOBIS) குறித்த தேசிய அளவிலானப் பயிலரங்கத்தினை நடத்தியது.
  • IndOBIS என்பது உலகளாவியப் பெருங்கடல் பல்லுயிர்ப் பெருக்கத் தகவல் வழங்கீட்டு அமைப்பின் (OBIS) இந்தியப் பிராந்தியத்திற்கான முனையமாகும்.
  • உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், அரசாங்கங்கள் மற்றும் நிறுவனங்களால் பங்காற்றப்பட்ட ஆயிரக்கணக்கான தரவுத் தொகுப்புகளிலிருந்து பெறப்பட்ட சுமார் மில்லியன் கணக்கான பதிவுகளைக் கொண்ட கடல் இனங்கள் பற்றிய தகவல்களின் மிகப்பெரிய உலகளாவிய களஞ்சியங்களில் OBIS ஒன்றாகும்.
  • இது உலகப் பெருங்கடல்கள் முழுவதும் காணப்படும் இனங்களின் பரவல், அவற்றின் உருவாக்கம், வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அளவுருக்கள் பற்றிய பல தரவுகள் உள்ளிட்ட விரிவான தகவல்களை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்