தஸ்ரா மற்றும் பெயின் & கோ நிறுவனம் ஆனது சமீபத்தில் இந்தியப் பெருந்தகைமை குறித்த அறிக்கையினை வெளியிட்டது.
இந்தியாவில் பெருந்தகைமை நிலையைப் பற்றிய விரிவான பகுப்பாய்வான இந்த அறிக்கையானது, அவற்றின் சுவாரஸ்யமானப் போக்குகளைப் பற்றியத் தகவல்களை வழங்குகிறது.
இந்தியாவின் மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களினால் (UHNIs) மேற்கொள்ளப்படும் தொண்டு சார்ந்தப் பங்களிப்புகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
முந்தைய நிதியாண்டில் 11,821 பில்லியனாக இருந்தப் பங்களிப்பானது 2022 ஆம் நிதி ஆண்டில் ரூ.4,230 பில்லியனாக குறைந்தது.
2021 ஆம் நிதியாண்டில் ரூ.4,041 கோடியாக இருந்த மற்ற அனைத்து மூலங்களில் இருந்தும் வழங்கப்படும் மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களின் பங்களிப்பு ஆனது 2022 ஆம் நிதியாண்டில் 3,843 கோடியாகக் குறைந்து உள்ளது.
ஆனால் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புச் சார்ந்த செலவினம் 5% அதிகரித்து, 2021-22 ஆம் ஆண்டில் 27,000 கோடி ரூபாயாக இருந்தது.
இந்தியாவின் அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள் கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் பங்களிப்பு வழங்கி உள்ளனர்.
பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புச் சார்ந்தப் பங்களிப்புகள் ஆண்டுதோறும் 19% என்ற விகிதத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 2026 ஆம் நிதியாண்டில் மொத்தத் தனியார் துறைப் பங்களிப்புகளில் சுமார் 32% விகிதத்தை இது எட்டக் கூடும்.
இந்திய மிக அதிக-நிகரச் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களின் ஒப்பீட்டுப் பங்களிப்புகள் 0.1% முதல் 0.15% வரை இருக்கும்.
அவை அமெரிக்காவில் 1.2% முதல் 2.5% வரையிலும், ஐக்கியப் பேரரசில் 0.5% முதல் 1.8% வரையிலும், சீனாவில் 0.5% முதல் 1.4% வரையிலும் உள்ளது.