2021-22 ஆம் நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் 8.3% என்ற அளவு வரை உயரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
“Shifting Gears : Digitization and Services – Led Development” என்று தலைப்பிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கையில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 தொற்றிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் வேகம் மற்றும் வேளாண் & தொழிலாளர் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவது போன்றவற்றைப் பொருத்து அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வாய்ப்புகள் நிர்ணயிக்கப் படும்.
2021-22 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் (ஏப்ரல்-ஜுன்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 20.1% வரை உயர்ந்துள்ளது.
2020-21 ஆம் நிதி ஆண்டின் முதல் காலாண்டுப் பகுதியில் கொரோனா வைரசின் காரணமாக விதிக்கப்பட்ட தேசிய அளவிலான பொது முடக்கத்தினால் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.4 வரை சுருங்கியது.